My friend Varatharaj's first serious try at poetry..

Made some tiny tinkering works in this.. Sorry for that varathu..
The original could be lot more better.......

இவ்வுலகம் கைக்குள் அடக்கம்..
நிலையான அடக்கம் கொடுக்கும்..
புதியதோர் இனம் படைக்கும்..
சினத்தை துறந்த ஏழாம் அறிவை கொடுக்கும்..
பொல்லாத வினையை அறவே தடுக்கும்..

இது இந்த யுகத்திற்குயேற்ற வியாபாரம்..
நான் கண்ட நட்டமில்ல வியாபாரம்..
அல்ல அல்ல பெருகுமாம்,
கொடுக்க கொடுக்க செழிக்குமாம்..

எழுதுகோல் மை உமிழ..
எழுதுவார் கற்பனை மழையை பொழிய..
கருத்துக்கள் கவிதையாய் நீந்த..
மனிதன் கண்ட அற்புத புதையல்

இந்த புத்தகப்புதையல்......

Show Comments